Monday, August 30, 2010

தீவிரவாதம்

காவித் தீவிரவாதம்" என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனபா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முதலமைச்சருமான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய அவர், அரசு நிர்வாகம் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பிரதமர் பதவிக்குரிய மரியாதையும் குறைந்து, மன்மோகன் செயலற்றுப் போய் உள்ளதாக குற்றம் சாற்றினார்.

"காவித் தீவிரவாதம்" என்ற வார்த்தையைக் கூறிய சிதம்பரத்தைக் கண்டித்த மோடி, சர்தார் வல்லாபாய் படேல் போன்ற இரும்பு மனிதர்கள் அலங்கரித்த உள்துறை அமைச்சகத்தின் மதிப்பை குறைக்கும் வகையில் சிதம்பரம் போன்றவர்கள் நடந்துகொள்வது துரதிருஷ்டவசமானது என்றார்.

கோவில்களில் காவிக் கொடி இல்லையா? என்று கேள்வி எழுப்பிய மோடி, கோவிலை தீவிரவாதத்தின் மையம் என்று கூறமுடியுமா எனக் கேட்டார்.

"சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சங்கராச்சார்யா, ஸ்வாமி ராமதாஸ் போன்றவர்கள், காவித் துணி அணிந்துதான் இந்த நாட்டுக்காக தியாகம் புரிந்தார்கள். அவர்களையும் நீங்கள் தீவிரவாதிகள் என்று அழைப்பீர்களா?

காங்கிரஸார் ஒவ்வொருவரும் இதற்கு பதிலளிக்க வேண்டும்" என்று மோடி மேலும் கூறினார்.

இது நாள் வரையிலும் முஸ்லீம் தீவிரவாதம் என்று மீடியாவில் சொல்லும் போது அதை பற்றி கவலைபடாமல் சமீபதில் நடக்கும் சம்பவங்களுக்கு காரணமானவர்களை பற்றி உள் துறை அமைச்சர் பேசிய உன்மை பேச்சை எதிர்த்துமன்னிப்பு கேட்க்க சொல்லி பாராளுமன்ரத்தில் கூச்சல், என்ன ஒரு மத சார்பின்மை!இது வரை தீவிரவாதத்திற்கு மத சாயம் பூசியவர்கள் இப்போது காவி என்றுசொன்னவுடன் நிறம் மில்லை என்று கூச்சல்.

எதிரி சொத்து சட்ட திருத்த வரைவை திரும்பப் பெற்றது அரசு!

-இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது விட்டுச் செல்லப்பட்ட சொத்துகள் பராமரிப்பு தொடர்பான சட்டத்தில் அரசு கொண்டுவர இருந்த திருத்தத்திற்கு சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த திருத்தச் சட்ட வரைவை மத்திய அரசு திரும்பப்பெற்றது.பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிற்குச் சென்றவர்களின் சொத்துக்கள் 2,000 உள்ளன. இப்படிப்பட்ட சொத்துக்களை பராமரிப்பது தொடர்பான எதிரி சொத்துக்கள் சட்டத்திலும், அது தொடர்பாக அரசு வெளியிட்ட பிரகடனம் ஒன்றிற்கு மாற்றாகவும் ஒரு சட்ட திருத்த வரைவை மத்திய அரசு இன்று மக்களவையில் தாக்கல் செய்தது.இந்த சட்ட வரைவின்படி, அப்படி விட்டுச் செல்லப்பட்ட சொத்துக்கள் மீது நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசு தாக்கல் செய்த இந்த சட்ட வரைவு, முஸ்லீம்களுக்கு எதிரானது என்று சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட வரைவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனை முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா எதிர்த்தது. இப்போதுள்ள நிலையிலேயே சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜூம், அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானியும் கூறினர்.இவர்களின் கோரிக்கைக்கு சிவசேனைக் கட்சியும் ஆதரவாக நின்றது.இச்சட்டம் தொடர்பாக கடந்த மாதம், ஜூலை 2ஆம் தேதி அரசு பிரகடனம் செய்த அவசரச் சட்டத்தையும், இந்த சட்ட வரைவையும் நன்கு பரிசீலித்தப் பிறகு, அதில் மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வேண்டும் என்று கருதினால், அதனைச் செய்து நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.இந்த சட்ட வரைவை இப்போதுள்ள நிலையிலேயே நிறைவேற்ற வேண்டு்ம் என்றும், அப்படிச் செய்தால் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்றும் கூறிய சுஷ்மா சுவராஜ், அதில் திருத்தம் ஏதும் கொண்டுவரப்பட வேண்டுமெனில் அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.இதனை ஏற்க மறுத்த அமைச்சர் சிதம்பரம், “அடிப்படையற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. ஆளில்லா வீட்டில் பேய் இருக்கிறதா என்று நீங்கள் தேடுகிறீர்கள். விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு திருத்தங்களை கொண்டு வரலாமே என்று சில கட்சிகள் விரும்புகின்றன. அதில் எந்த இரகசியமும் இல்லஎன்று கூறி, சட்ட திருத்த வரைவை அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.