Monday, September 13, 2010

நகரம்

இன்றைய நகர வாழ்க்கையை பற்றிய நாதன் என்பவர் எழுதிய கவிதையை படித்து ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பிதேன் இதோ அந்த கவிதை

தாஜ்மகாலை வடிவமைத்தவர்
உஸதாத் இசா
ராஜராஜ சோழனின் இயர்பெயர்
அருள்மொழி வர்மன்
காமராஜரின் அரசியல் குரு
தீரர் சத்தியமூர்த்தி
பைந்தமிழ் தேர்ப் பாகன்
என்றழைக்கப்பட்டவர் பாரதியார்
தமிழ் உரைநடையின் தந்தை
வீரமா முனிவர்
யாதும் ஊரே;யாவரும் கேளிர்
என்றவர் கணியன் பூங்குன்றனார்
ஆசியாவிலேயே முதன்முதலில்
விற்பனை வரியை அறிமுகப்படுத்தியவர்
ராஜாஜி
டாம்-ஜெர்ரி கார்ட்டூன்
கதாபாத்திரங்களைப் படைத்தவர்கள்
வில்லியம் ஹன்னா,ஜோ பார்பெரா
எல்லாம் தெரிந்து என்ன செய்ய?
முகமூடி திருடன்
எஙகள் பகுதியில் நுழைந்தபோது
அவசர உதவிக்கு அழைக்க
பக்கத்து வீடுகளில் உள்ளவர்களின்
செல்போன் எண் இல்லை.
அதுகூடப் பரவாயில்லை
அவர்களின் பெயர்....?

No comments:

Post a Comment